டெல்லி: சாரதா சிட்பண்ட் பண மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி, நீட் தேர்வு வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாதாடிய நளினி சிதம்பரத்தின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனமான சாரதா சிட்பண்ட் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா […]
