சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: சீனாவிலிருந்து வந்த மர்ம பலூன்கள் அடுத்தடுத்து அமெரிக்க வான் எல்லைக்குள் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2வது பலூனை பார்த்துள்ளதாக பென்டகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2வது பலூன் குறித்த தகவல் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சீனாவிலிருந்து ஊடுறுவிய உளவு பலூன்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இவை சாதாரண வானியல் மாற்றங்கள் தொடர்பாக ஆராய அனுப்பப்பட்ட பலூன்கள் என்று சீனா சொல்கிறது.

ஆனால் இந்த பலூன் விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொண்டுள்ளது அமெரிக்கா. தேசிய பாதுகாப்பு படையினருடன் பென்டகன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பிடனுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த பலூன் விவகாரம் தொடர்பாக ராணுவ ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுப்பது குறித்து அமெரிக்கா இதுவரை முடிவு செய்யவில்லை.

முதலில் இந்த பலூனை சுட்டு வீழ்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ராணுவம் சம்மதம் தெரிவிக்கவில்லை. காரணம், அந்த பலூனின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அதிலிரு்நது வரும் பொருட்களால் ஏதாவது பிரச்சினை வருமா என்ற சந்தேகத்தை ராணுவம் எழுப்பியுள்ளது. அதேசமயம், இது கடலுக்கு மேல் போகும்போது சுட்டு வீழ்த்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று ராணுவம் தெரிவித்துள்ளதாம்.

சீனா அனுப்பியுள்ள இந்த பலூன் 3 பெரிய சைஸ் பஸ்களுக்கு சமமான நீளம் கொண்டதாகும். பலூனின் கீழ்ப் பகுதி 90 அடி அகலம் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த பலூன் விவகாரம் காரணமாக, அமரெிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் சீனப் பயணம் ஒத்தி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பலூன் உளவு பார்க்கும் பலூன் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதுதொடர்பாக ஆராயப்படும். எனது சீனப் பயணத்தை தள்ளி வைத்துள்ளேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.