ஜேர்மன் கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்…


ஜேர்மன் நகரமொன்றில் ஏராளம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி கால்பந்து பயிற்சியளித்துவந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கால்பந்து பயிற்சியாளர்

பவேரியாவிலுள்ள Weilheim நகரில் இளைஞர்கள் பலருக்கு கால்பந்து பயிற்சி அளித்துவந்தவர் Carsten Linke (52). ஒரு தந்தைபோல் அக்கறை காட்டி, பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துவந்த Carsten, அவ்வப்போது காணாமல் போய்விடுவாராம்.

இப்படி அருமையான ஒரு பயிற்சியாளர் அடிக்கடி பிள்ளைகளை அநாதரவாக விட்டுச் சென்றுவிடுகிறாரே என சக பயிற்சியாளர்கள் நினைப்பதுண்டாம். 

ஜேர்மன் கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்... | Football Coach Unmasked Russian Double Agent

உண்மை நிலவரம்

உண்மை என்னவென்றால், தன் ஊரில் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருந்த Carsten, ஜேர்மன் உளவுத்துரையில் பெரிய பொறுப்பு ஒன்றை வகிப்பவர் என்பதாகும்.

அதாவது, ஜேர்மனியின் உளவுத்துறையில் பணியாற்றிய அவர், வெளி உலகுக்கு ஒரு கால்பந்து பயிற்சியாளராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். அந்த வேலையை நன்றாகவும் செய்துள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இன்னொரு முகம்

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் Carsten திடீரென கைது செய்யப்பட்டார். அவர் உக்ரைன் தொடர்பான சில உளவுத்துறை இரகசியங்களை ரஷ்யாவுக்கு அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவ்வப்போது பார்பிக்யூ விருந்துகள் வைக்கும் Carsten, ஒரு கட்டத்தில், விருந்துக்கு வந்த Arthur E என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் முன்னாள் போர் வீரர்கள் என்பதால், விரைவில் நண்பர்களாகியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த Arthur மூலமாகத்தான் Carsten ரஷ்யாவுக்கு இரகசிய செய்திகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்... | Football Coach Unmasked Russian Double Agent

CREDIT: Sputnik/Mikhail Metzel/Kremlin via Reuters

இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜேர்மன் உளவுத்துறையில் பெரிய பொறுப்பு வகித்த ஒருவரே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்காக உளவு பார்க்கும் எண்ணத்தை உருவாக்கியது யார், Arthur ரஷ்யாவுக்கு உளவு பார்ப்பதற்காகவே Carstenஐ பார்பிக்யூ விருந்தில் சந்திக்க அனுப்பப்பட்டாரா? அல்லது, Carsten உளவு பார்ப்பதற்காக Arthurஐ பயன்படுத்திக்கொண்டாரா? பொறுப்பான பதவியிலிருந்துகொண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி, அந்த எண்ணத்தை உருவாக்கியது யார், ஜேர்மன் உளவுத்துறையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது Carsten மட்டுமா அல்லது வேறு யாராவது இருக்கிறார்களா, என பல கேள்விகளுக்கான பதில்களை ஜேர்மன் கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.
 

ஜேர்மன் கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்... | Football Coach Unmasked Russian Double Agent

CREDIT: Craig Stennett for The Telegraph



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.