தேனி மாவட்டத்தில் திருமணத்தன்று 40 பவுன் நகை, பணத்துடன் மாப்பிள்ளை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பிரபாகரன் (27) திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இந்த காதல் விவகாரம் குறித்து இரண்டு வீட்டார்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டார் சம்பந்தத்துடன் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மணமகன் பிரபாகரன், 40 பவுன் தங்க நகை கார் ஒரு லட்சம் பணத்துடன் திடீரென காணாமல் போனார்.
இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாயமான பிரபாகரனை தீவிரமாக தேடனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருமணத்தன்று நகை பணத்துடன் மாயமான பிரபாகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.