சென்னை: விடுதிகளில் வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கடந்த மாதம் நந்தனம் உடற்கல்வி மாணாக்கர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் து, மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தமிழகஅரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ளது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இங்கு ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் […]
