பிரான்சில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி


பிரான்சிலுள்ள Calais துறைமுகத்தில், பொலிசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள்.

வழக்கமான சோதனையில் கிடைத்த போதைப்பொருட்கள்

அப்போது, போலந்து நாட்டவர் ஒருவர் ஓட்டி வந்த அந்தக் காரில் கஞ்சா, கொக்கைன் முதலான 4 வகை போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுவும், மொத்தம் 350 கிலோ போதைப்பொருட்கள் அந்தக் காரில் இருந்துள்ளன.

அவற்றின் மதிப்பு 4 மில்லியன் யூரோக்களாகும்.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த போதைப்பொருட்கள் தனது காரில் எப்படி வந்தது என்று தனக்குத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.
 

பிரான்சில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி | 340 Kg Of Drugs Seized In France Police



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.