சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களிடம் பணிகளை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனான கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சிப் பொறுப்பேற்று இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது, இதற்கு எந்தவித மறுப்பும் […]
