
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் வாணி ஜெயராம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, தான் வாழ்த்து தெரிவித்த நிலையில், விருது பெறும் முன்னரே இவ்வுலகை அவர் விட்டுப் பிரிந்தது பெரும் துயரம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். வாணி ஜெயராமின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in