Vani Jayaram: பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்!

பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி வாணி ஜெயராம்வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1945ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி துரைசாமி பத்மாவதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். கலைவாணி என்ற பெயரை பின்னர் வாணி என மாற்றிக்கொண்டார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த வாணி ஜெயராம், 1973 ஆம் ஆண்டு வெளியான அபிமனவந்துலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.​ Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!​
50 ஆண்டுகளுக்கும் மேல்தொடர்ந்து சினிமாத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஆயித்துக்கும் மேற்பட்ட ஆன்மிக பாடல்களையும் தனிப்பட்ட ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார் வாணி ஜெயராம். தீர்க்க சுமங்கலி படத்தில் வாலியின் வரிகளில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடலை பாடியிருந்து. இதேபோல் முல்லும் மலரும் படத்தில் நித்தம் நித்தம் நெல்லு சோறு, போன்று பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் வாணி ஜெயராம்.
​ Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!​
நெற்றியில் காயங்களுடன்எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இசையில்தான் அதிக பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் வாணி ஜெயராம். இந்நிலையில் வீட்டில் நெற்றியில் காயங்களுடன் மர்மான முறையில் மரணமடைந்து சடலாமாக கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராமின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையறையில் கீழே விழுந்து இறந்து கிடந்ததாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
​ Leo: விஜய் கூட மல்லுக்கட்ட இத்தனை கோடிகளா? லியோ படத்திற்கு சஞ்சய் தத் வாங்கும் சம்பளம்!​
ஏராளமான விருதுகள்தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஒடியா, பெங்காலி என 19 மொழிகளில் சினிமா பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
78 வயதான சமீபத்தில்தான் வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மறைந்த வாணி ஜெயராம் 3 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். அதில் ஒரு முறை தமிழிலும் (அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் பாடல்), 2 முறை தெலுங்கிலும் பெற்றுள்ளார் (அதில் ஒன்று சங்கராபரணம், இன்னொன்று ஸ்வாதி கிரணம்).
​ AK 62: காத்திருந்து… காத்திருந்து… கடைசியில் ஏமாந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்… கலங்கும் ரசிகர்கள்!​
அடுத்தடுத்து சோகம்3 முறை பிலிம்பேர் விருதும், மாநில அரசுகளின் விருதுகளை 4 முறையும் பெற்றுள்ளார் வாணி ஜெயராம். இதுதவிர ஏராளமான உள்ளூர், தேசிய, சர்வதேச விருதுகளையும் வாணி ஜெயராம் பெற்றுள்ளார். இவருக்கு தென்னிந்திய மீரா என்ற பட்டம் 2007ம் ஆண்டு வழங்கப்பட்டது. நேற்றுதான் பிரபல இயக்குநரான கே விஸ்வநாத் மரணமடைந்தார். அவரை தொடர்ந்து பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளேயே பாடகி வாணி ஜெயராம் மரணம் அடைந்திருப்பது சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
​ Samantha: 30 கிலோ புடவை… 3 கோடி ரூபாய் மதிப்பில் நகை… சகுந்தலம் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சமந்தா!​
வாணி ஜெயராம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.