இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்| Gang rape of teenage girl: Chargesheet filed against former chief secretary of Andaman

போர்ட் பிளேயர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.

அந்தமானில், 12 வயது இளம்பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு, ஜிதேந்திர நரைன் உட்பட உயரதிகாரிகள் சிலர் சேர்ந்து, அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக, அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, ஜிதேந்திர நரைனிடம் மூன்று முறை விசாரணை நடத்தியது. இதையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி, உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் ஜிதேந்திர நரைன், டில்லி நிதித்துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். ஜிதேந்திர நரைன் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

latest tamil news

இது தொடர்பாக, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜிதேந்திர நரைன் உள்பட சிறையில் உள்ள 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது கோர்ட்டில் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.