6 பந்துகளில் 6 சிக்ஸர்! புதிய வரலாறு..வாணவேடிக்கை காட்டிய வீரரின் வீடியோ


பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.

இஃப்திகார் அகமது

பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. முதலில் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர் அணி 184 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் அல்ரவுண்டர் வீரர் இப்திகார் அகமது 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசினார்.

வாஹப் ரியாஸ் வீசிய ஓவரை சிதறடித்த அவர், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டு அரங்கை அதிர வைத்தார்.

பின்னர் ஆடிய பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் கிளாடியேட்டர்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

வரலாற்று சாதனை

ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசியதன் மூலம் இந்த சாதனையை செய்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற புதிய வரலாற்றை இஃப்திகார் அகமது படைத்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை படைத்த 11வது வீரர் இஃப்திகார் ஆவார்.  

இஃப்திகார் அகமது/iftikhar ahmed

@PCB/Instagram 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.