மாளவிகா மோகனனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பார்த்த ரசிகர்களுக்கு பயம் வந்துவிட்டது.
மாளவிகாசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்தவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். தற்போது சீயான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படங்கள்மாளவிகா மோகனனின் பெயரை சொன்னாலே அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தான் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. பாவாடை தாவணியில் கூட படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பார். கவர்ச்சி முதல் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா மோகனன் அண்மை காலமாக சேலை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.
போட்டோஷூட் View this post on Instagram A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)
ரசிகர்கள்முன்பும் கூட மாளவிகா மோகனன் சேலையில் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். ஆனால் சேலையில் கூட செம செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார். தற்போது பயங்கர அடக்க ஒடுக்கமாக சேலை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இது எங்க மாளவிகாவே இல்ல. மாளவிகாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி எல்லாம் ஆன்ட்டி மாதிரி போஸ் கொடுக்கிறார் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சேலை View this post on Instagram A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)
நெட்டிசன்ஸ்அடப்பாவிகளா, ஒரு நடிகை ஒழுங்காக சேலை அணிந்து போஸ் கொடுத்தால் இப்படியா கவலைப்படுவது. உங்கள் ரவுசுக்கு எல்லாம் ஒரு அளவே இல்லையா என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். அது சரி, மாளவிகா மோகனன் என்றாலே கவர்ச்சி நடிகை என்று ரசிகர்கள் செட் ஆகிவிட்டார்கள். அப்படி இருக்கும்போது மாளவிகா இப்படி திடீர்னு ஹோம்லியாக மாறினால் அவர்களுக்கு அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கத் தான் செய்யும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
ரஞ்சித்ஒரு வேளை, பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதால் இப்படி அநியாயத்துக்கு ஹோம்லியாக மாறிவிட்டாரா மாளவிகா மோகனன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்கலான் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா. ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் தங்கலான் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
தங்கலான்தங்கலான் படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாக ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட் சீயான் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சீயான், மாளவிகா ஜோடி சேர்ந்திருப்பது இது தான் முதல் முறையாகும். இந்த படத்தில் மாளவிகாவுக்கு வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் பெயருக்காக ஹீரோயினாக இருந்தார் மாளவிகா. இந்நிலையில் தான் தங்கலானில் நடித்து வருகிறார்.