சென்னை: அதிமுக விவகாரம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன் அதிமுகவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் சென்றுள்ளார். இன்று மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் அவர் சமர்ப்பிக்க உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு வழக்கு […]
