அதிரடியாக சரியும் சாம்ராஜ்யம்!: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 8வது நாளாக சரிவு..!!

குஜராத்: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 8வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6.52 சதவீதம் அதாவது ரூ.103 குறைந்து ரூ.1480ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.9.60 குறைந்து ரூ.182ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் அதாவது ரூ.140 குறைந்து ரூ.1261ஆக வர்த்தகமானது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.46 குறைந்து ரூ.887ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.81 குறைந்து ரூ.1544ஆக வர்த்தகமானது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.20 குறைந்து ரூ,380ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் 1 சதவீதம் அதாவது ரூ.5.8 அதிகரித்து ரூ.504ஆக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.