சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்5 புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். எக்ஸ்4 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து இது அறிமுகமாகி உள்ளது.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது. பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது போக்கோ. அந்த வகையில் இப்போது எக்ஸ்5 புரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.67-இன்ச் FHD+ pOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 108 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட் கொண்டுள்ளது
- இதன் விலை ரூ.22,999 மற்றும் ரூ.24,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அறிமுகம் சலுகையாக விலையில் ரூ.2,000 தள்ளுபடி செய்துள்ளது. வரும் 13-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Get Lost! Just letting you know the COP technology on the POCO X5 Pro 5G blurs the lines between 2 worlds to achieve a nearly borderless effect.#POCOX5Pro5G #UnleashX pic.twitter.com/KPtIXRLYDa
— POCO India (@IndiaPOCO) February 6, 2023