இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல்


பிரித்தானிய இளவரசர் ஹரி, புத்தகம் எழுதுவதாகக் கூறிக்கொண்டு பலருக்கு பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

எப்போதோ நடந்த விடயங்களைக் கிளறும் ஹரி
 

தன் புத்தக விற்பனைக்காக, எப்போதோ நடந்த விடயங்களை எல்லாம் இப்போது வெளிக்கொண்டுவந்துகொண்டிருக்கிறார் ஹரி. அவை சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குமா என்ற கவலை கொஞ்சமும் அவருக்கு இல்லை.

தானும் தன் முன்னாள் காதலியான Caroline Flackஐயும் அவரது குடும்பத்தினரையும் ஊடகவியலாளர்கள் தொந்தரவு செய்ததால், தாங்கள் இருவரும் பிரிந்துவிடுவது எனவே முடிவு செய்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஹரி, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும் அவரைக் குறித்து தனது புத்தகத்தில் எழுதியதற்காக 12 ஆண்டுகள் Carolineஉடன் பணியாற்றிய Alex Mullen என்பவர், ஹரியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் | Sasha Walpole Dad Prince Harry Virginity

Credit: Dan Charity

தனது கன்னித்தன்மையை இழந்தது குறித்து எழுதிய ஹரி

தான் இளம் வயதில் ஒரு மூத்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்ததைக் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள ஹரி, அதனால் அந்த பெண்ணுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை.

21 ஆண்டுகளாக அந்த விடயத்தை தன் தந்தையிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ள சாஷா (Sasha Walpole, 40) என்னும் அந்தப் பெண், தற்போது ஹரியின் புத்தகத்தில் அந்த விடயம் வெளியானதால், அதைக் குறித்து தன் தந்தையிடம் கூறவேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

அது 2001ஆம் ஆண்டு. அன்று சாஷாவின் 19ஆவது பிறந்தநாள். நண்பர்கள் நன்றாகக் குடித்துவிட்டு சுற்றிக்கொண்டிருக்கும்போது, ஹரியும் சாஷாவும் முத்தமிட்டுக்கொள்ள, கடைசியில் அது பாலுறவில் முடிந்திருக்கிறது.

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் | Sasha Walpole Dad Prince Harry Virginity

அந்த விடயத்தை உடனே தன் தாயாகிய Lyn (65)இடம் கூறியிருக்கிறார் சாஷா. ஆனால் தன் தந்தை Tony (71)இடம் அதை அவர் கூறவில்லையாம்.

இதற்கிடையில் நடந்த விடயம் வேறு சிலருக்கும் தெரியும் என்பதால், அதை மற்றவர்கள் வெளியே சொல்வதற்கு முன்னால், தானே ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்திருக்கிறார் சாஷா. அதற்கு முன் அது குறித்துத் தன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்திருக்கிறார் அவர்.

ஆக, இவ்வளவு காலம் மறைத்த விடயத்தைக் குறித்து ஹரி தன் புத்தகத்தில் விவரமாக எழுதியுள்ளதால், அதைக் குறித்துத் தன் தந்தையிடம் கூறவேண்டிய தர்மசங்கடமான நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் | Sasha Walpole Dad Prince Harry Virginity

Credit: Dan Charity

இன்னொரு விடயம், இவ்வளவு ஆண்டுகளாக இந்த விடயத்தை யாராவது வெளியே சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்ததாகவும், இப்போது அதைத் தானே வெளியில் சொல்லிவிட்டதால் நிம்மதியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார் சாஷா.

தற்போது சாஷாவுக்கு Ian என்பவருடன் திருமணமாகி, தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இன்னொரு முக்கிய விடயம், அந்த சம்பவத்துக்குப் பிறகு ஹரியும் சாஷாவும் இதுவரை பேசிக்கொண்டதில்லையாம்.
 

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் | Sasha Walpole Dad Prince Harry Virginity



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.