ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசு போட்டி! தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு, கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் நேரில் சமர்பித்தார் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசைன். அந்த ஆவணத்தில் முக்கியமான தகவல்களும் தரவுகளும் இடம் பெற்றிருந்தன. அதில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசுக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக  குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுக வேட்பாளர் தென்னரசு என்பதை இது உறுதி செய்தது.

மொத்தமுள்ள உறுப்பினர்களில் 2665 பேரில் தென்னரசுக்கு எதிராக ஒரு படிவம் கூட அவைத்தலைவரிடம் சமர்பிக்கப்படவில்லை என்பது அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தவிர, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசைன் அளித்த ஆவணத்தில் இருந்த வேறு தகவல்கள் பின்வருமாறு.

மறைந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை- 15

பதவி காலாவதியான உறுப்பினர்கள் எண்ணிக்கை – 2

மாற்றுக்கட்சிக்கு சென்ற (கட்சித்தாவல்) உறுப்பினர்கள் – 2

படிவங்களை பெற்று அனுப்பாத உறுப்பினர்கள் – 17

என தேர்தல் ஆணையம் கோரக்கூடிய தகவல்கள் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசைன் வழங்கிய ஆவணத்தில் இடம்பெற்றிருந்தன. 

இதனிடையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிருப்தி பிரிவின் தலைவரான ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதனைத் தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டி இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் தான், ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகனின் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதோடு, 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக உள்ளதாக பாஜக கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.  

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ்-க்கு பாஜக அண்ணாமலை ஆதரவு ஓபிஎஸ் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதையும் கவனத்தில் கொண்டு ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.