ஈவிகேஎஸ்சுக்கு வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி… உதயசூரியன், கை சின்னம் கோலமிட்டு அசத்திய பெண்கள்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான போட்டியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வீரப்பன்சத்திரம் பகுதியான 17 ஆவது வார்டில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் இளங்கோவன் வீடு வீடாக சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீதீகளில் வீட்டு வாசலில் பெண்கள் உதயசூரின், கை சின்னங்களுடன் வண்ண கோலமிட்டு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளரை வரவேற்றனர்.

பின்னர் 17வார்டு பகுதி பெண்கள் தெரிவிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது கட்டணமில்லா பேருந்து சலுகை, படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் உதவி தொகை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் பெண்களுக்கான புதிய திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று அந்த பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.