ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்! இலங்கையின் வான்வெளியை அயல் நாட்டிற்கு இழக்க நேரிடும் என அச்சம்


இலங்கை வானூர்தி போக்குவரத்து சேவை தொடர்பில் இலங்கை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் 19 பேர் ஒரு வருட காலத்திற்குள் பதவி விலகியுள்ளனர்.

இதன்காரணமாக இலங்கையில் செயல்படும் வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது.

ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்! இலங்கையின் வான்வெளியை அயல் நாட்டிற்கு இழக்க நேரிடும் என அச்சம் | Air Traffic Controllers Association Of Sri Lanka

வானூர்திப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும்

மேலும் நான்கு அல்லது ஐந்து கட்டுப்பாட்டாளர்கள் வெளியேறினால் பணிப்புறக்கணிப்பு இல்லாவிட்டாலும் வானூர்திப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும்.

இந்த நிலையில் சர்வதேச வானூர்தி போக்குவரத்து அமைப்பின் ஊடாகவே வானூர்தி போக்குவரத்து சேவைகளை நாட்டுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

இதன்போது இலங்கையின் வான்வெளியை அயல் நாட்டிற்கு இழக்க நேரிடும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.