“டீச்சர் அடிச்சால் தப்பு இல்லை”- மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு!

2014 ஆம் ஆண்டு இரண்டு சகோதரிகளை அடித்தததாக பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டு வயது உடைய இரு சகோதரிகள் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். ஐந்து வயது மாணவி தன்னுடைய வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு, மற்றொரு மாணவியின் தண்ணீரை குடித்து உள்ளார்.

இது குறித்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததன் பேரில், தண்ணீரை குடித்த மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். மேலும், தன் தங்கை என்ன செய்கிறாள் என பார்க்க வந்த அவரது அக்காவையும் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. IPC பிரிவு 324ன் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் அந்த ஆசிரியருக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

தண்டவாளத்தை ஆட்டையை போட்ட கும்பல்; பீகாரில் நடந்த சம்பவம்!

இந்த தண்டனையை எதிர்த்து, ஆசிரியர் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த மும்பை உயர்நீதிமன்றம் சில முக்கிய கருத்துக்களை கூறி உள்ளது.

மும்பை உயர்நீதிமன்றம் கூறியதாவது; சமுதாயத்தில் ஆசிரியர்கள் என்பவர்கள் அதிகம் மதிக்கப்படுபவர்கள். அவர்கள் தான் நமது கல்வி என்ற கட்டமைப்பின் முதுகெலும்பு. ஒரு ஆசிரியர் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட நேர்ந்தால், குறிப்பாக ஒரு மாணவனை நல்வழி படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன், அவனது எதிர்கால நலனுக்காகவும் செய்யும்போது இது போன்ற குற்றசாட்டுகள் எழ நேர்ந்தால் லவ்வி முறை என்ற கட்டமைப்பே பாதிப்புக்கு உள்ளாகும்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது கல்வி கற்பதற்காக மட்டும் அல்ல. அதனோடு சேர்த்து வாழ்வின் ஒழுக்கத்தையும், பரிமாணத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதே நேரத்தில், பாட புத்தகங்களில் இருக்கும் பாடத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஒரு பள்ளியின் நோக்கம் அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் வருங்காலத்தில் நல்ல ஒழுக்கமான பழக்க வழக்கங்களோடு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அக்குழந்தை மற்றொரு மாணவியின் தண்ணீரை குடித்ததாக தெரிகிறது. இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்ததால் ஆசிரியர் அடிக்க நேர்ந்துள்ளது. எனவே மாணவரின் நலனுக்காக ஆசிரியர் அடிப்பதும், திட்டுவதும் குற்றம் ஆகாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு நாகரீகமான சமூகம் என்பது நாகரீகமான எதிர்கால இளைய தலைமுறையை உருவாக்குவதே ஆகும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.