மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். பிப்ரவரி 1ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ. 2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதில், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும் ரயில்பாதைகள் விரிவுபடுத்த ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய […]
