தோனி பட நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா? கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி.  அதன் பின்னர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ‘பரத் எனும் நான்’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்து வரும் இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார்.  ‘ஷேர்ஷா’ படத்தில் நடித்ததன் மூலம் சித்தார்த் – கியாரா அத்வானி இடையே காதல் மலர்ந்தது, இவர்களது திருமணம் பற்றி தான் நீண்ட நாட்களாக திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.  அதன் பின்னர் இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி ராஜஸ்தான் பகுதியின் ஜெய்சல்மாரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  முகேஷ் அம்பானி உட்பட பிரபலங்கள் பலருக்கும், இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.  அதன்படி பிப்ரவரி 6-ம் தேதியான இன்றைய தினம் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திருமணம் தள்ளிப்போனதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.  பிப்ரவரி-6ம் தேதி நடைபெறவிருந்த திருமணம் ஒரு நாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி இன்றைய தினம் மெஹந்தி, நாளைய தினம் சங்கீத் விழாவும் அதற்கு மறுநாள் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

kaira

பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பிரபலமான நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி ஷங்கர் இயக்கும் ‘ஆர்சி15’ படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.