பிரித்தானிய பள்ளி வளாகத்தில் பரபரப்பு:குடும்பத்துடன் மர்மமாக இறந்து கிடந்த கல்லூரி தலைவர்


பிரித்தானியாவின் எப்சம் கல்லூரி தலைவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடம் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம மரணம்

பிரித்தானியாவின் எப்சம் கல்லூரி தலைவரான எம்மா பாட்டிசன்(45) அவரது கணவர் ஜார்ஜ்(39) மற்றும் அவர்களது மகள் லெட்டி(7) ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை 01: 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள சொத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவையால் தனியார் பள்ளி வளாகத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பள்ளி வளாகத்தில் பரபரப்பு:குடும்பத்துடன் மர்மமாக இறந்து கிடந்த கல்லூரி தலைவர் | Uk Epsom College Head And His Family Dead

பொலிஸார் தெரிவித்துள்ள கருத்தில், இந்த மர்மமான மரணத்தில் மூன்றாவது நபர் ஈடுபட்டு இருக்கவில்லை, நிச்சயமாக இவை தன்னிச்சையான செயலாக தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மர்ம மரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வாக்குறுதி

இந்த சம்பவம் தொடர்பாக துப்பறியும் தலைமை ஆய்வாளர் கிம்பால் ஈடி வழங்கிய தகவலில், சர்ரே பொலிஸ் சார்பில், நானும், என்னுடைய குழுவும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களை எம்மா-வின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்கிறோம், அதே சமயம் அவர்களது இழப்பிற்காக கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பள்ளி வளாகத்தில் பரபரப்பு:குடும்பத்துடன் மர்மமாக இறந்து கிடந்த கல்லூரி தலைவர் | Uk Epsom College Head And His Family Dead

மேலும் எங்களது விசாரணைகள் மூலம் நேற்று இரவு என்ன நடந்தது என்பதை நிச்சயமாக கண்டுபிடிப்போம் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன் மற்றும் குழப்பமான சூழ்நிலையில் சிறிது அமைதி உருவாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கடினமான நேரத்தில் அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.