மோடி பின்னால் ஒளிஞ்சாலும் இழுத்து போட்டு அடி; வார் ரூம் ரெட்டிக்கு மாரிதாஸ் வார்னிங்!

யூ-டியூபர் மாரிதாஸ் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை அவ்வப்போது போட்டு உடைத்து கொண்டே இருக்கிறார். இவர் தீவிர வலதுசாரி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இவரது வீடியோக்கள் பெரும்பாலும் திராவிட கட்சிகளை கடும் விமர்சனம் செய்வதும், அந்த சித்தாந்தத்தில் செயல்படும் நபர்களை குறிவைப்பதும் என இருக்கின்றன. இந்நிலையில் முதல்முறை பாஜகவை சேர்ந்த நிர்வாகியை பிடித்து கொண்டு பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார்.

மாரிதாஸ் vs அமர் பிரசாத் ரெட்டி

அவர் தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி. யூ-டியூப் ஒன்றிற்கு பேட்டியளித்த போது காயத்ரி விவகாரத்தை குறிப்பிடும் போது

வம்புக்கு இழுக்கும் வகையில் பேசி சிக்கிக் கொண்டார். மாரிதாஸ் பாஜகவில் சேர்ந்து பதவிக்கு வந்து அப்புறம் பேசட்டும். நான் பதில் சொல்கிறேன் என திமிறாக பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பார்ட்-2 வீடியோ

அதற்கு மாரிதாஸ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் வெறும் யூ-டியூபர் அல்ல என்றும், வார் ரூம் ரெட்டியின் உண்மை முகம் என்னவென்றும் விளக்கியிருந்தார். தன்னை பற்றி பேசியதற்கு அமர் பிரசாத் ரெட்டி உரிய விளக்கம் தர வேண்டும். இல்லையெனில் பார்ட் – 2 வீடியோ வெளிவரும் என எச்சரித்திருந்தார்.

விளக்கம் கொடுப்பாரா?

இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டரில்,
“அமர் பிரசாத் ரெட்டி உங்களிடம் விளக்கம் கொடுத்தாரா எனக் கேட்டவருக்கு “இல்லை இது விளக்கமா? எப்போதும் போல உள்ளே ஒன்னு பேசி வெளியே வேறு ஒன்னு பண்ணுவான். இது முன்பும் நடந்துள்ளது” என நான் தான் கேட்ட அனைவருக்கும் அவன் மெசேஜ் கொடுத்தேன். பெரும்பாலும் பத்திரிக்கை மற்றும் பாஜக நிர்வாகிகள்.

அடி நிச்சயம்

லீக் ஆகும் அளவு அவ்வளவு பகையை வளர்த்து வச்சுருக்க வார் ரூம் ரெட்டி. ஆக “இனி இது போல் பேச மாட்டேன்” என கூறினால் விவகாரத்தை முடிப்பேன். இல்லை தொடர்ந்து அமர் மொத்த பித்தலாட்டமும் அமல்படுத்தப்படும். பாஜக, மோடி என யார் பின்னால் போய் ஒளிந்தாலும் இழுத்துப் போட்டு அடி நிச்சயம்.

ரூட்டை மாத்தாதீங்க

திகவிடம் பழகி லீக் செய்யும் அளவுக்கு என் தரமில்லை. மொத்த விஷயத்தையும் மடை மாற்ற முயற்சி செய்வது வீண். ஆனால் அமர் பாஸ்போர்ட் முதல் அனைத்து நிறுவன ஆவணங்கள் தொட்டு தில்லாலங்கடி தகவல்களும் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முகத்திரை கிழிக்கப்படும்”
என்று பதிவிட்டுள்ளார்.

கட்சி தலைமை நடவடிக்கை

இதனால் அமர் பிரசாத் ரெட்டி குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குட்புக்கில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் ரெட்டி மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? இல்லை வேறு ஏதேனும் ட்விஸ்ட்கள் அரங்கேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.