யார் இந்த விக்டோரியா கவுரி? ஏன் இவ்ளோ எதிர்ப்பு… ‘நோ’ டூ ஹைகோர்ட் ஜட்ஜ்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப கொலிஜீயம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 8 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரி என்பவரும் அடங்குவார். இவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று மூத்த வழக்கறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வலுக்கும் எதிர்ப்பு21 வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து குடியரசு தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜீயத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கலாம் எனக் கூறி ஆதரவாக கடிதம் எழுதினர். இதனால் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. அதுமட்டுமின்றி விக்டோரியா கவுரிக்கு நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தகவல் வெளியானது.
சட்ட அமைச்சருடன் சந்திப்புமுன்னதாக பிப்ரவரி 16, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தால் நீதிபதிகளுக்கான பட்டியலில் விக்டோரியா கெளரி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 2, 2022 அன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து மத்திய சட்ட அமைச்சரை விக்டோரியா கவுரி சந்தித்துள்ளார். இதெல்லாம் சட்டப்படி சரியா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
​​
இது சட்டப்படி சரியா?
உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்இந்நிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி, விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யார் இந்த விக்டோரியா கவுரி. இவர் நீதிபதி ஆகக்கூடாது என்று ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
சட்டக் கல்லூரிகன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் விக்டோரியா கவுரி. தனது இளங்கலை சட்டப் படிப்பை மதுரை சட்டக் கல்லூரியில் படித்து முடித்தார். இதையடுத்து கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய நிலையில் பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
பாஜக நிர்வாகிஇவர் நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. பாஜக மகளிரணி தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். இதனால் அக்கட்சியின் சிந்தாந்தத்தை ஒட்டி செயல்பட்டு வந்திருக்கிறார். பாஜகவிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துகள் இன்னும் சமூக வலைதளங்களில் அப்படியே உள்ளன.
வழக்கறிஞர்கள் எதிர்ப்புஇந்நிலையில் பாஜகவில் படிப்படியாக உயர்ந்து மத்திய அரசு வழக்கறிஞராக பதவி பெற்றார். ஒரு கட்சியின் அடையாளத்துடன் செயல்பட்டு வரும் ஒருவரை, அந்த சித்தாந்தத்தை அடித்தளமாக வைத்து செயல்படும் ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தால் எப்படி ஜனநாயக முறைப்படி தீர்ப்புகளை வழங்குவார் என்ற கேள்வியை வழக்கறிஞர்கள் பலரும் எழுப்புகின்றனர்.

மத்திய அரசு நியமனம்
மதவாத சக்திகள் வேண்டாம்விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கறிஞர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீதித்துறையில் இந்துத்துவ சக்திகள், மதவெறி சக்திகள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். இத்தகைய மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.