விரைவில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு! எப்படி பதிவிறக்கம் செய்வது?

CBSE Admit Card 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு பிப்ரவரி 15 முதல் தொடங்கவுள்ளது. வழக்கமாக மாணவர்களும் தங்களுக்குரிய பள்ளி அதிகாரிகளிடம் தங்கள் அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் அல்லது தங்களின் அனுமதி அட்டையை www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்பொழுது?

முன்னதாக, 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கள் குறித்து சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது. 2023 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும். அதே சமயம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும். இரு வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒரே ஷிப்டில் நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு முடிவடையும்.

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள்

சிபிஎஸ்இ அட்மிட் கார்டு 10 மற்றும் 12 வகுப்புகள் அரசு மற்றும் தனியார் மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும். அட்மிட் கார்டில் மாணவரின் பெயர், ரோல் எண், தேர்வு தேதி மற்றும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். மாணவ-மாணவிகள் தங்கள் அனுமதி அட்டை விவரங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்களின் அட்மிட் கார்டுகளை தேர்வு நாளில் அந்தந்த மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள், அக மதிப்பீடுகளை ஆகியவற்றை பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு எப்படி பதிவிறக்கம் செய்வது?

படி 1: நீங்கள் cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள ‘சிபிஎஸ்இ அட்மிட் கார்டு 2023 10 அல்லது 12 ஆம் வகுப்புகளைப் பதிவிறக்கு’ (Download CBSE Admit Card 2023) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது ‘அங்கீகார விவரங்கள்’ (Authentication Details) பக்கம் திரையில் காட்டப்படும்.

படி 4: விண்ணப்ப எண், பெயர், தாயின் பெயர் மற்றும் தந்தையின் பெயர் போன்ற சான்றுகளை மாணவர்கள் உள்ளிட வேண்டும்.

படி 5: அதன்பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 6: உங்களுக்கான சிபிஎஸ்இ அட்மிட் கார்டு 2023 (CBSE Admit Card 2023) திரையில் காட்டப்படும். அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.