230 Online Betting மற்றும் Loan செயலிகளுக்கு தடை விதித்த இந்திய அரசு!

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் இயங்கும் முக்கிய OTT தலங்களான Netflix, Hotstar மற்றும் Amazon Prime Video போன்ற நிறுவனங்களுக்கு இனி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் தினசரி தொலைக்காட்சிகளிலும் இந்த Betting Apps மற்றும் Loan Apps விளம்பரங்களுக்கு தடை விதித்தது.

இந்தியாவில் தொழில்நுட்ப துறை அமைச்சகம் (MeitY) 138 சூதாட்டம் மற்றும் 94 ஆன்லைன் கடன் தரும் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு காரணமாக பொதுமக்களை ஏமாற்றி பல செயலிகள் இயங்குவதாகவும் அதனால் இந்தியாவில் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மக்களை போலியாக திசை மாற்றி ஏமாற்றும் இதுபோன்ற ஆன்லைன் செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு ஆபத்து என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதால் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல OTT தளங்களில் இந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் பற்றிய விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாகிவருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதற்காகவே அதிகப்படியான IMTF (High Level Inter Ministerial Task Force) என்ற பாதுகாப்பு அமைப்பை அரசு உருவாகியுள்ளது. குழந்தைகளும் ஆன்லைன் மூலமாக அதிகப்படியான நேரங்களை செலவிடுகிறார்கள். கேமிங் என்பதில் குழந்தைகள் அதிகப்படியான நேரம் செலவழித்து வாழ்க்கையை இழக்கிறார்கள்.

இதற்காக உண்மையான பணத்தை கூட சில குழந்தைகள் செலவழித்து ஏமாற்றுவது பலமுறை செய்தியாக வந்துள்ளது. அதற்காக இந்த அதிரடி நடவடிக்கை பலரால் பாராட்டப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இயங்கிவரும் 54 சீனாவின் செயலிகள் இந்திய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 100க்கும் மேற்பட்ட சீனாவின் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.