கடந்த மாதம் அஜித்தின் ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் தொடர்ச்சியாக மூன்று தடவை எச். வினோத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
கடந்த 11 ஆம் தேதி அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக ‘துணிவு’ வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாதி முழுக்கவும் அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி வங்கி சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 200 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதகாவும், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசயமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
Sudha Kongara: ரொம்ப வலிக்குது.. கையில் பலத்த காயத்துடன் சுதா கொங்கரா: அதிர்ச்சியான ரசிகர்கள்.!
ஆனால் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக எழுதிய கதை அவருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் இதனால் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அவருக்கு பதிலாக தற்போது மகிழ் திருமேனி ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Vetrimaaran: ‘ஆர் ஆர் ஆர்’ பட நாயகனை இயக்க போகும் வெற்றிமாறன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.!
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித்தின் புகைப்படங்களை, அவரின் மனைவி ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)
அஜித்தின் தாறுமாறான ஸ்டைலிஷ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ‘ஏகே 62’ படத்திற்கு அஜித் தயாராகிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)