Dhanush, Vaathi: பயத்தில் தனுஷ்: காரணம் யார்னு தெரிந்து ஷாக் ஆகக் கூடாது

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ரசிகர்களை பார்த்து, உங்யகளை நினைத்து பயமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் தனுஷ்.

வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனுஷுடன் அவரின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் கலந்து கொண்டார்கள். தனுஷ் மேடைக்கு வந்ததுமே அவரை பேசவிடாமல் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
தனுஷ்மேடையில் பேசிய தனுஷ் ரசிகர்களுக்கு அறிவுரை செய்தார். அவர் கூறியதாவது, நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது தான். இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். தயவு செய்து என் காரை பின் தொடர்ந்து வருவதை நிறுத்துங்கள். உங்களுக்கென்று குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் என்றார்.

​Dhanush: வேலையில்லாமல் மன உளைச்சல்: பாவம், தனுஷுக்கே இப்படி ஒரு நிலைமையா!

ரசிகர்கள்திரையுலக பிரபலங்கள் காரில் செல்வதை பார்த்தால் ரசிகர்கள் அவர்களின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அப்படி பிரபலத்தின் காரை பின்தொடரும்போது விபத்து ஏற்பட்டு ரசிகர்கள் காயம் அடைந்தது எல்லாம் நடந்திருக்கிறது. அதை மனதில் வைத்து தான் தனுஷ் இப்படி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ரசிகர்களின் பாதுகாப்பை நினைத்து பயப்படுவதாக கூறியுள்ளார்.

ஆசிரியர்தனுஷ் மேலும் கூறியதாவது, வாத்தியாராக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த படத்தில் நடித்தபோது தெரிந்து கொண்டேன். நான் பள்ளியில் படித்தபோது அப்பா, அம்மா பீஸ் கட்டிவிடுவார்கள் என கவனமில்லாமல் சுற்றி வந்தேன். தற்போது என் மகன்களை படிக்க வைக்கும்போது தான் அந்த கஷ்டம் தெரிகிறது என்றார்.

வெற்றிமாறன்தனுஷ் தனக்கு ராசியான இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., தனுஷ் என்று இரண்டு ஹீரோக்களாம். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் தனுஷ் வருவார் என கூறப்படுகிறது. எது எப்படியோ, தனுஷுக்கு மூன்றாவது தேசிய விருது கிடைத்துவிடும் என்கிறார்கள் ரசிகர்கள்.

​Dhanush:எதிர்பார்த்தது போன்றே மீண்டும் ‘அவருடன்’ சேரும் தனுஷ்: ரசிகர்கள் செம ஹேப்பி

விடுதலைசூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். அந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசையில் ஒன்னோட நடந்தா என்கிற பாடலை பாடியிருக்கிறார் தனுஷ். அந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ஒன்னோட நடந்தா முழு பாடலும் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகவிருக்கிறது.

பாடகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.