Nayanthara: என்ன ஆனாலும் அதை மட்டும் மறந்துடாதீங்க..லேடி சூப்பர் ஸ்டார் சொன்ன அட்வைஸ்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தன் இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

அதன் பின் வல்லவன், யாரடி நீ மோஹினி என பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்பு பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்த நயன்தாராவின் மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதன் பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய நயன்தாரா தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகின்றார்.

LEO: லியோ படத்தினால் ஏறிய மவுசு..பலமடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரபலம்..!அதுக்குன்னு இவ்வளவா ?

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் நயன்தாரா. மேலும் அட்லீ இயக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் நயன்தாரா.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியின் விழாவிற்கு நயன்தாரா சிறப்பு விருந்தினராக சென்றார்.

அங்கு மாணவர்களிடம் பேசிய நயன்தாரா, கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் படித்து முடித்து உயரத்தை அடைந்த பிறகு எப்போதும் பணிவுடன் இருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் நயன்தாரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.