Vaathi, Dhanush: சாதியை தூக்கி எறிந்த தனுஷ் பட நடிகை: குவியும் பாராட்டு.!

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. தனுஷின் கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படம் வெளியாகவுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘நானே வருவேன்’ படமும் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீசுடன் போட்டியாக திரையரங்குகளில் வெளியான ‘நானே வருவேன்’ படம் சுமாரான வெற்றியையே குவித்தது. இதனையடுத்து தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். வெங்கி அட்லுரி இயக்கும் இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’வாத்தி’ படத்தின் நாயகி சம்யுக்தா மேனன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘எனது பெயர் சம்யுக்தா தான், ஆனால் மேனன் என்ற ஜாதி அடையாள பெயர் போட்டுக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

Jailer: அடேங்கப்பா.. மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலயே.!

மலையாள சினிமாவில் பல சம்யுக்தாக்கள் இருப்பதால் மீடியாக்கள் என்னை தனியாக காட்ட மேனன் என்று இணைத்துக் கொண்டனர். இனிமேல் என்னை தயவுசெய்து மேனன் என்று ஜாதியை அடையாளப்படுத்தாமல் சம்யுக்தா என்று கூறினால் போதும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சம்யுக்தா.

Ajith Kumar: ‘ஏகே 62’ படத்திற்காக தாறுமாறாய் தயாராகும் அஜித்: தீயாய் பரவும் போட்டோஸ்.!

மேலும் ’வாத்தி’ படம் குறித்து பேசிய சம்யுக்தா, ’இந்த படம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டுக்காட்டும். நான் பாலக்காட்டு பெண்ணாக இருந்தாலும் எனக்கு சரளமாக தமிழ் வரும். தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருந்தாலும், இதுவரை சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தனுஷுடன் வரவேண்டும் என்பதற்காக தான் இவைகள் நடந்ததாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். ‘வாத்தி’ படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.