ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 75 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு […]
