துருக்கியில் தரைமட்டமான 5,600 கட்டிடங்கள்…உள்நாட்டு போரால் சிரியாவில் தாமதமடையும் மீட்பு பணி: முழு விவரம்


துருக்கியில்  உணரப்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் சுமார் 5,600 கட்டிடங்கள் வரை தரைமட்டமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் மீட்பு பணிகள் தாமதமடைந்து வருகிறது.

துருக்கி-சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்

துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தின் பசார்சிக் நகரில் திங்கட்கிழமை அதிகாலை 4:17 மணியளவில், 7.8 ரிக்டர் என்ற அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் மையம் கொண்டு வெளிப்பட்டது.

இந்த பயங்கரமான நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்த பின் அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 4,159 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் இந்த பலி எண்ணிக்கையானது தொடர்ந்து உயரக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் பேரழிவுகரமான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் சுமார் 5,600 கட்டிடங்களை வரை தரைமட்டாகியுள்ளன மற்றும் 13,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

 உலக நாடுகளின் மீட்புக் குழு துருக்கிக்கு விரைந்து இருக்கும் நிலையில், 10 மாகாணங்களில் இருந்து 7800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் 10,000 பொதுமக்கள் வரை வீடற்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் கடுமையான குளிரில் தங்கள் இரவை கழித்தனர்.

துருக்கியில் தரைமட்டமான 5,600 கட்டிடங்கள்…உள்நாட்டு போரால் சிரியாவில் தாமதமடையும் மீட்பு பணி: முழு விவரம் | Turkey Syria Earthquake 4159 People Dead ResqueTwitter 

சிரியாவில் தாமதமடையும் மீட்பு பணிகள்

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் ஏற்கனவே சுமார் 4 மில்லியன் மக்கள் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களை விட்டு வெளியேறி விட்டனர். 

அத்துடன் இப்பகுதிகளில் நடைபெற்ற இராணுவ தாக்குதல்களால் பெரும்பாலான மக்கள் வசிக்கும் கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படும் சூழ்நிலையில், இந்த நிலநடுக்கம் கட்டிடங்களை முற்றிலுமாக உருக்குலைத்துள்ளது.

இந்நிலையில் சிரியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்ட சிரியாவின் மீட்புப் படையினர் விரைந்து உள்ளனர், மேலும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க “நேரத்திற்கு எதிராக போராடி வருவதாகவும்” தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் ஐ.நா தூதர் Bassam Sabbagh ஐக்கிய நாடுகளிடம் உதவி கோரியதை அடுத்து, அதன் உறுப்பு நாடுகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் அவர் சிரியாவின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து சிரியர்களுக்கும்” உதவி வழங்கவும் ஒருங்கிணைக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் எல்-மஸ்தபா பென்லம்லிஹ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வழங்கிய தகவலில், உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன, மனிதாபிமானப் பணிகளுக்காக நாங்கள் பயன்படுத்திய சாலைகள் சேதமடைந்துள்ளன, மக்களை எவ்வாறு போய் சேர்வது என்பதில் நாம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் கடினமாக உழைக்கிறோம்,” குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் தரைமட்டமான 5,600 கட்டிடங்கள்…உள்நாட்டு போரால் சிரியாவில் தாமதமடையும் மீட்பு பணி: முழு விவரம் | Turkey Syria Earthquake 4159 People Dead Resque

7 நாள் தேசிய துக்கம்

வரலாறு காணாத நிலநடுக்கத்தால் துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்களை உயிரிழந்ததை அடுத்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, செக் குடியரசு மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பேரிடர் மீட்பு குழுவினர் துருக்கி மற்றும் சிரியாவிற்கு விரைந்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.