திரிபுரா தேர்தல்: பாஜக வியூகம்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

திரிபுராவில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிரவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் முடிவு மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என் ஏதிர்பார்க்கப்படுகிறது.

25 ஆண்டுகளாக சி பி எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி திரிபுராவில் நடந்து வந்தது. அதனை தோற்கடித்து பாஜக அரசு வெற்றி பெற்றது. திரிபுராவை பொறுத்தவரை ஆளும் பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இத்தனை ஆண்டுகள் எதிரும் புதிருமாக இருந்த இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் கூட்டணி வைத்து தங்களுக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்டன. பாஜகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே இவர்களின் முஹிய்ய நோக்கமாகவும் உள்ளது.

அதே நேரத்தில் பழங்குடியின மக்களுக்கு தனி மாநிலம் என்ற தேர்தல் வாக்குறுதியுடன் திப்ரா மோதா கட்சியும் இந்த தேர்தலை களம் காண்கின்றனர். எனவே 2023 ஆம் ஆண்டு நடக்கும் திரிபுரா சட்டசபை தேர்தலை பொறுத்தவரைக்கும் இது மும்முனை போட்டியாக நடக்க இருக்கிறது.

அதானி விவகாரம்; நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி கேட்ட ராகுல் காந்தி!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் நட்டா ஏற்கனவே திரிபுராவில் நடைபெற்ற இரண்டு ரத யாத்திரையில் பங்கேற்று உள்ளார். மேலும், இந்த முறை தேர்தலுக்கான அறிக்கையை ஜே பி நட்டா வெளியிட உள்ளார் என தெரிகிறது. தேர்தல் அறிக்கை வெளியான பிறகு பொது பேரணியில் ஜே பி நட்டா பஞ்சுக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மோடியின் இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை மாநிலத்தின் மீது அதிக கவனம் செலுத்தியும், குறிப்பாக இளைஞர்கள் சார்ந்த முன்னேற்ற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பாக்கறப்படுகிறது.

கடந்த திரிபுரா தேர்தலில் பாஜக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 3.8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு, மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.

பாஜகவை பொறுத்தவரை திப்ரா மோதா கட்சியின் பழங்குடியினருக்கு தனி மாநிலம் என்ற வாக்குறுதியை முழுமையாக எதிர்த்து வருகின்றனர். அவ்வாறு நடந்தால், பழங்குடியின மக்களுக்கும், குடியேறிய மக்களுக்கும் மோதல் ஏற்படும் என பாஜக கூறி வருகிறது. திப்ரா மோதா கட்சி ‘ பி ‘ டீமாக செயல்பட்டு வருவதாக பாஜக தரப்பு குற்றம் சாற்றி வந்தனர். இதற்க்கு பதில் அளித்த திப்ரா மோதாகட்சியின் தலைவர், பாஜகவே பல மாநிலங்களில் ‘பி’ டீமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.