பிரித்தானியர்கள், இனி தங்கள் அன்பிற்குரியவர்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ வேண்டாம். அவற்றிற்கு மாற்றாக வேறு திட்டங்கள் தயாராகிவருகின்றன.
இங்கிலாந்து திருச்சபை, மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதிய திட்டங்கள் குறித்து திட்டமிட்டுவருகிறது.
மட்கச் செய்யும் முறை
அவற்றில் ஒன்று மட்கச் செய்யும் முறையாகும். அதாவது, இறந்த உடலுடன் மர சீவல்கள், மரத்தூள், வைக்கோல் மற்றும் Alfalfa என்னும் தாவரம் ஆகியவற்றை சேர்த்து நுண்ணுயிர்கள் உதவியுடன் மட்கச் செய்வது இம்முறையாகும். இறந்தவரின் உடல், 60 நாட்களில் மண்ணாக மாறிவிடும்.
Image: AFP via Getty Images
நீர் தகனம்
அதேபோல, இறந்த உடலுடன், சுடுதண்ணீர் மற்றும் காரம் (alkali) சேர்த்து, உடலை நான்கு மணி நேரத்தில் சாம்பலாகவும், திரவமாகவும் மாற்றும் நீர் தகனம் என்னும் முறையும் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
இந்த புதிய சுற்றுச்சூழலுக்கு உகந்த தகன முறைகளைப் பின்பற்றுவதில் மத ரீதியாக ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா என்பது குறித்து பிஷப்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
image: Getty Images/iStockphoto
Image: AFP via Getty Images