புது டெல்லி: கடந்த அக்டோபர் 1 முதல் நம் நாட்டில் 5ஜி சேவையை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. கடந்த ஜனவரி 31, 2023 நிலவரப்படி 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிம சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.
நம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏல நடவடிக்கை நடைபெறும்.