'இந்த பணிவுதான் முதலமைச்சராக்குமாம்'… செந்தில் பாலாஜி..? ச்சே ச்சே இருக்காது…

தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மட்டும் லைம் லைட்டிலேயே இருந்து வருவது ஏன் என்ற கேள்வி சில நாட்களாகவே பலருக்கு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த தொடக்க நாட்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திதான் பேச்சு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த துறை.
ஸ்டாலின்
அமைச்சரவையில் நிதி இலாகா யாருக்கு ஒதுக்கப்படும் என்று ஆவலாக இருந்த நிலையில் வெளிநாட்டில் பொருளாதாரம் படித்து பிரபல நிதி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிடிஆருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதற்கு அடுத்தது அமைச்சர் அன்பில் மகேஷ். உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமாக இருந்ததால் அவரை அடுத்த துணை முதல்வர் என்றும் உதயநிதியை வருங்கால முதல்வர் என்றும் இளம் உ.பிக்கள் பெருமைபட்டுக்கொண்டனர். இப்படி சில கணிப்புகள் ஒரு பக்கம் இருக்க, சத்தமே இல்லாமல் முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக மாறி ஸ்டாலின் மனதில் கோட்டையை கட்டிவிட்டாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘விசுவாசம்னா அப்படி ஒரு விசுவாசம்’ என்கிறது அறிவாலயம்.

மேலும், செந்தில் பாலாஜியை நம்பி ஒரு விஷயத்தை விட்டுவிட்டால் வெற்றியை மட்டும்தான் ரிசல்டாக தருவார் என்று கூட்டணி கட்சியினர் சொல்லும் அளவுக்கு செந்தில் பாலாஜியின் தரம் எங்கேயே போய்விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் செந்தில் பாலாஜியை குறித்து பேசியது அப்படிதான் இருந்தது. செய்தியாளர்கள், உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி என்று இளங்கோவனிடம் கேட்டபோது, ” அமைச்சர் செந்தில் பாலாஜி என் பக்கம் இருக்கிறார் கண்டிப்பாக வெற்றிதான் என்று கூறினார். எனவே, கொங்கு மண்டலத்தில் திமுகவின் தேர்தல் நாயகனாகவும் செந்தில்பாலாஜி திகழ்கிறார்.

அதேபோல செந்தில் பாலாஜிக்கு, பெரிய துறையான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டுள்ளதால் தலைமை மீது அளப்பரிய மதிப்பையும், விசுவாசத்தையும் வைத்துள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்துகொண்டு திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த செந்தில் பாலாஜிக்கு, இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் நாற்காலிக்கே செல்லலாம் என்கின்றனர்.

இதுகுறித்து பேசும் சவுக்கு சங்கர் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள், உதயநிதி அமைச்சர் ஆன பிறகு செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் மாறியுள்ளது என்றும் உதயநிதியைகூட அவர் அண்ணன் என்று மேடையிலேயே தயக்கம் இல்லாமல் பேசுவதாகவும் விமர்சிக்கின்றனர். மேலும், முதல்வர் ஆசை யாருக்குத்தான் இருக்காது; அதுபோல செந்தில்பாலாஜிக்கும் இருக்கு, மற்ற அமைச்சர்கள் அதற்கு முயற்சிப்பதை போல தெரியவில்லை, ஆனால் செந்தில் பாலாஜி அதற்கான காய்களை கட்சிதமாக நகர்த்தி வருவதாக கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.