திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார்.
அந்த விழாவில் பேசிய அவர் “காமராஜர் பல அணைகளை கட்டினார், இருப்பினும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு பெரிய குறைபாடாக போய்விட்டது.
காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என்ற அடையாளத்தை கொடுத்தவர். ஆனால் தமிழ்நாடு என்ற பெயரை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. தற்பொழுது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு வீழ்ச்சி தொடங்கியுள்ளது” என பேசி இருந்தார்.
இந்த நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோன்று பெருந்தலைவர்கள் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர் தனபால் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தனது முழு ஆதரவை தெரிவித்தது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.