'தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒரு குப்பை' அதுக்கு எப்படி ஆஸ்கர் விருது எதிர்பார்க்கலாம்? பிரகாஷ் ராஜ்

Prakash Raj vs The Kashmir Files: தன் மனதில் படும் கருத்துகளைத் தயங்காமல் பேசும் வல்லமை கொண்ட தென் இந்தியா சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒருமுறை தன் கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது “இந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது” என “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலை குறித்த பேசும் திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ‘குப்பை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி படத்தின் தயாரிப்பாளரையும் நடிகர் பிரகாஷ் ராஜ் குறிவைத்துள்ளார.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளும் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், கேரளாவில் இலக்கிய விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜிடம், ​​ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒரு கும்பல் கோரிக்கை வைத்ததை குறித்து பிரகாஷ் ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

மோடியின் படத்தை ஓடவைக்க முடியவில்லை
அதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “இவர்கள் ‘பதான்’ படத்தைத் தடை செய்ய நினைத்தார்கள், இந்த படம் 800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையை செய்து வருகிறது. பதான் படத்தை தடை செய்ய நினைத்தவர்களால் முட்டாள்கள், மதவெறியர்களால் மோடியின் படத்தை 30 கோடி ரூபாய்க்குக் கூட ஓடவைக்க முடியவில்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு ‘குப்பை’. 2022 ஆம் ஆண்டில் வெளியனா ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு பிரச்சார அடிப்படையிலான திரைப்படம். அவர்களுக்கு குரைக்க மட்டுமே தெரியும். கடிக்கத் தெரியாது. அதைப்பற்றி எல்லாம் கவலை வேண்டாம் என்றார். 

 

ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது
இது மட்டுமின்றி, தனது பேச்சை முடிக்கும்போது, ​​பிரகாஷ் ராஜ், “பாலிவுட்டின் சில முட்டாள்தனமான படங்களில் ஒன்று “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்தப் படத்தைத் தயாரித்தவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த இயக்குனர் “ஏன் என்னுடைய படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை’ என்று கேட்கிறார்.  இந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. 

2000 கோடி முதலீடு
எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில்,  அவர்கள் இதுபோன்ற படங்களை எடுக்க சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால், இவர்கள் ஒவ்வொரு முறையும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.