டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பதிலுரை அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர்,’நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம்,’என்றார்.
