ஜோத்பூர்: பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சரும், முன்னாள் டிவி நடிகையுமான ஸ்மிருதி இரானியின் மூத்த மகள் ஷானெல் இரானிக்கும், வெளிநாடு வாழ் இந்தியரான வழக்கறிஞர் அர்ஜுன் பல்லா என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருமண விழா நடைபெற உள்ளது. ஜோத்பூருக்கும் நாகவுருக்கும் இடையில் அமைந்துள்ள கின்சர் கோட்டையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த கால ராஜாக்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளை போன்று, தனது மகளின் திருமணத்தை ஸ்மிருதி இரானி நடத்த உள்ளார். அதனால் கின்சர் கிராமத்தில் உள்ள கிந்வார் கோட்டை புக் செய்யப்பட்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையானது, தார் பாலைவனத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. இந்த கோட்டையில் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு மட்டுமே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது.