மாண்டியா, : ”கே.ஆர்.பேட் தொகுதியில் ரேவண்ணா போட்டியிட மாட்டார். அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா,” என ம.ஜ.த., – எம்.எல்.ஏ., புட்டராஜு வர்ணித்துள்ளார்.
மாண்டியா பாண்டவபுராவில், நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, மாண்டியாவின், கே.ஆர்.பேட் தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா. இங்கு அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
ஹாசன் சட்டசபை தொகுதியில், பவானி ‘சீட்’ எதிர்பார்க்கிறார். இது குறித்து, தேவகவுடாவின் வழிகாட்டுதலில், ரேவண்ணாவும், குமாரசாமியும் முடிவு செய்வர். ம.ஜ.த.,வை குடும்ப அரசியல் கட்சி என, எடியூரப்பா விமர்சிக்கிறார்.
இவரது இரண்டு மகன்கள் அரசியலில் இல்லையா. சித்தராமையாவின் மகன் அரசியலில் இல்லையா. அவர்களுக்கு சீட் அளிக்கவில்லையா. எந்த கட்சியில் குடும்ப அரசியல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement