Dhanush: வாத்தி ட்ரைலர்..கொண்டாடும் ரசிகர்கள்..இருந்தாலும் அதை நினைச்சா தான் பயமா இருக்காம்..!

கடந்தாண்டு தனுஷிற்கு திரைத்துறையை பொறுத்தவரை சிறப்பான ஆண்டாகவே அமைந்தது எனலாம். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு எதுவுமின்றி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டியிருப்பார்.

AK62: மகிழ் திருமேனியும் கிடையாதா ? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த படக்குழு..!

இப்படமும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கும் வாத்தி திரைப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவுள்ளது. வெங்கி இயக்கத்தில் வெளியாகும் இபபடத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த ட்ரைலரை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும் ஒருவித பயத்திலேயே அவர்கள் இருக்கின்றனர்.

ஏனென்றால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்களை தெலுங்கு இயக்குனர்கள் தான் இயக்கியிருந்தார்கள். அவ்விரு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதே போல வாத்தி படத்தையும் தெலுங்கு இயக்குனர் தான் இயக்கியுள்ளார் என்பதால் தனுஷ் ரசிகர்கள் சற்று கலக்கத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.