Simbu, STR: இனி அவர் சகவாசமே வேண்டாம்… ஏணியை தூக்கியெறிந்த சிம்பு?

இனிமேல் அந்த பிரபல இயக்குநருடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என முடிவு செய்துள்ளாராம் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புஇயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட டி ராஜேந்தரின் மகன்தான் நடிகர் சிம்பு. தனது அப்பாவை போலவே நடிகர் சிம்புவும் சினிமாவில் ஒரு ஆல் ரவுண்டர்தான். சிம்புவை பொறுத்தவரை சினிமாவில் அவர் கை வைக்காத துறைகளே இல்லை என்று கூறலாம். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு, பின்னர் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். ​ Nandamuri Balakrishna: நர்ஸ்கள் குறித்து ஆபாச பேச்சு.. கண்டனங்கள் வலுத்ததால் அந்தபல்டி அடித்த நடிகர்!​
காதல் சர்ச்சைதொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. சிம்பு பல காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். குறிப்பாக உச்ச நடிகர் ஒருவரின் மகளுடன் காதல், நடிகை நயன்தாராவுடன் காதல், நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் காதல் என பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் ஹீரோயினாக நடித்த நிதி அகர்வாலும் சிம்புவும் காதலிக்கிறார்கள் என கிசு கிசு பரவியது. அதன்பிறகு அந்த விஷயம் அப்படியே அடங்கி விட்டது.
​ Ajith, AK 62: தடம் இயக்குநருக்கு அஜித் போட்ட கண்டிஷன்… அப்டேட் லேட்டாக இதான் காரணமாம்!​
சிம்பு கவுதம் மேனன்காதல் சர்ச்சைகளால் 40 வயதை நெருங்கும் நடிகர் சிம்புவுக்கு இன்னமும் திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சக்கை போடு போட்டது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்தப் படம்தான் சிம்புவின் சினிமா கெரியரை அடுத்த லெவலுக்கு உயர்த்தியது.
​ புருஷன்தான் முக்கியம்னு முடிவெடுத்த நயன்தாரா!​
கருத்து வேறுபாடுஅதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த சிம்பு மூன்றாவது முறையாக அவருடன் இணைந்த படம்தான் வெந்து தணிந்தது காடு. வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கவுதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ​ Kiara Sidharth Wedding: 100 வகை உணவுகள்.. 500 வெயிட்டர்கள்.. எச்சில் ஊற வைக்கும் கியாரா சித் கல்யாண சாப்பாடு!​
இரண்டாம் பாகம்?இனிமேல் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க போவதில்லை சிம்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் சிம்பு இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவுக்கு இருவருக்கும் என்ன பிரச்சனை என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் வருவதும் கேள்விக் குறிதான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
​ Jacqueline Fernandez: மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை? பகீர் தகவல்!​
Simbu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.