சென்னை: கன்னியாகுமரியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் அமைப்பதற்கான நிலப்பரப்பு ஆய்வு நிறைவடைந்தது. தற்போது மணலை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 19 மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 749.36 கோடி மதிப்பில் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
