துருக்கி,சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு| Turkey, Syria earthquake: Death toll rises to 19,300

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அங்காரா: துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட பூம்பத்தினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டவர்கள் மொத்தமாக எரியூட்டப்படுகிறது.

latest tamil news

இந்நிலையில் துருக்கியில் 16,170, சிரியாவில் 3,162 என இருநாடுகளில் நிகழ்ந்த சக்திவாய்ந்த பூம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.