தென்காசி: பிரானூரில் பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை கொண்டு சமைப்பதாக வந்த புகாரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை செய்வதற்கு குடோனை திறக்க உரிமையாளர் மறுத்ததால் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
