சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெய்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே சில ஷெட்யூல்களில் நடித்து முடித்த ரஜினிகாந்த், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அண்மையில் சென்னையில் இருந்து ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஷெட்யூலில் ரஜினிகாந்துடன் ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன்லால் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜெய்லர் படத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், சூட்டிங் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இப்போது இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் ராஜஸ்தான் ஷெட்யூலில் இணைந்து நடித்து வருகின்றனர். ஜாக்கி ஷெராப் சூட்டிங் பங்கேற்ற வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஜெய்லர் படத்தை பொறுத்த வரை ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
— PoovarasanVLP (@vlpsivasakthi) February 6, 2023
அனிரூத் இசையமைக்கும் ஜெய்லர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். ஜெய்லர் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் கடும் விமர்சனங்களை சந்தித்ததால், இந்தப் படத்தை கட்டாயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனமும் ஒவ்வொரு ஷெட்யூலையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜூலை மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.