Ajith, AK62:தல கெளம்பிடிச்சுடோய், தாறுமாறா வைரலான அஜித்: என்னாச்சுனு தெரியுமா?

Ajith: அஜித் குமார் பற்றி தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ளுங்கள்.

அஜித்அஜித் குமாருக்கு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு உலகம் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும். தன் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிட்டார். அடுத்ததாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்வது தான் அஜித்தின் திட்டம். லண்டனுக்கு சென்ற அஜித் தற்போது ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஸ்காட்லாந்துஅஜித் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு புகைப்படம் எடுத்து சந்தோஷப்படுகிறார்கள். அஜித்துடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஸ்கலாட்லாந்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரை சும்மாவிடவில்லை. அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
தல
வைரல்அஜித் தன் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்தவர்களோ, என்னடா அஜித் இன்னும் டூர் போகவில்லையே என்று பார்த்தோம். தல தான் உலகம் சுற்றும் நபராச்சே. கொடுத்து வைத்தவர். அவர் போகும் இடங்களில் எல்லாம் வரவேற்பு தான். அஜித் நாளுக்கு நாள் ஃபிட்டாகிக் கொண்டே போகிறார் என தெரிவித்துள்ளனர்.

ஏ.கே. 62AK 62:ஏ.கே. 62 படத்தில் யார் இருக்கார்னு பாருங்க: அவரே கொடுத்த மாஸ் அப்டேட்கெரியரை பொறுத்தவரை ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிபார்த்து அனைவரும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள், அவர் தான் ஏ.கே. 62 படத்தின் இசையமைப்பாளர் என முடிவே செய்துவிட்டார்கள்.

விக்னேஷ் சிவன்ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்காமல் விக்கியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதையடுத்து ட்விட்டரில் தான் வைத்திருந்த அஜித்தின் கவர் பிக்சரை நீக்கிவிட்டார் விக்னேஷ் சிவன். அந்த இடத்தில் நெவர் கிவ் அப் என்கிற வாசகத்தை வைத்து தனக்கு தானே ஆறுதல் சொல்லியிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

​Vignesh Shivan: இந்த சோகத்திலும் அஜித் சொன்னதை மட்டும் மறக்காத விக்னேஷ் சிவன்

நயன்தாராவிக்னேஷ் சிவனை ஏ.கே. 62 படத்தில் இருந்து நீக்கியதும் அவர் கண் கலங்கிவிட்டாராம். அதை பார்த்த நயன்தாராவும் இடிந்துபோய்விட்டாராம். மேலும் அஜித் மீது கோபப்பட்டாராம் நயன்தாரா. இனி அஜித்துடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என முடிவு செய்திருக்கிறாராம். எனக்கு பிடித்த ஹீரோ அஜித் என நயன்தாரா பலமுறை கூறி வந்த நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.