ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கனி முதல் பரிசை தட்டி சென்ற நிலையில், இரண்டாவது ரன்னர் அப்பாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், குறும்படங்கள் நடித்து வந்த அஸ்வினுக்கு குக்வித் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்தார் அஸ்வின். இந்தப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த இரண்டு படங்களும் அஸ்வினுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அடுத்ததாக அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ’தேஜாவு’ என்ற படத்தை இயக்கியவர்.
Ajith Kumar: அஜித்தை நேரில் சந்தித்து அப்டேட் கேட்ட ரசிகர்: ஏகே என்ன சொல்லிருக்காரு பாருங்க.!
சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவான ‘தேஜாவு’ ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஜென்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.